Friday, August 21, 2020

யோகங்கள்

 ***வீணை யோகம்**


சந்திரன் நின்ற ராசிமுதல் 7கிரகங்களும் வரிசையாக அமைந்தால் அவர்கள் சினிமாத்துறையில் நட்சத்திரமாகவோ ,பாடகராகவோ ,ஏதேனும் ஒன்றில் புகழ்பெற்று விளங்குவார்...


***மணியோகம்***


லக்னாதிபதி அல்லது பஞ்சமாதிபதி 1,4,9 ல் இருந்தாலும் லக்னத்தில் சுபகிரகத்தில் இருந்தாலும் இந்த யோகம் வரும்...இதன் பலன் 40வயது வரை சுகம் அனுப்பவிப்பார்...முதுமையிலும் அனுவிப்பார்.


***கற்பூரயோகம்***


10க்குடையவனும் 4க்குடையவனும் பாவ கிரகங்களுடன் கூடி 6,8ல் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்...இதன் பலன் 22 வயதில் ஓரளவு சுகமும் 28 வயதில் சகல  செளபாக்கியமும் வந்து சேரும்..நல்ல கொடையாளி யாக இருப்பான்...


***விகடயோகம்***


10ல் 10க்குரியவனும்5,6,7,8,9ல்பாவி இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.. இதன் பலன் 32வயதுக்கு மேல் சுகம்..40வயதுக்கு மேல் நல்ல சுகம்...60வயதுக்கு மேல் இராஜ யோகம்....


மேலும் தொடர்புக்கு பரம்பரை ஜோதிடர் பிச்சை ராஜா 9952400917

Tuesday, August 11, 2020

****கடன்களை நிவர்த்தியாகும் முறைகள்***""

 கடன் நிவர்த்தியாகும் விதங்கள்:

1.அஸ்வினி நட்சத்திரமும் மேஷலக்கினமும் அனுஷம் நட்சத்திரமும் விருச்சிக லக்கினமும் கூடிய காலத்திற்கு மைத்ராமுகூர்த்தம் என்று கூறுவார்கள் அந்த நேரத்தில் கடனில் ஒருபகுதி அடைத்து விட்டால் அந்த கடன் முழுமையாக முடிந்துவிடும்.

2.   செவ்வாய் கிழமை நவமி திதியும் ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும் சனிக்கிழமை சதுர்த்தி திதியும் சேர்ந்து விடும் நாளில் குளிகன் உதயமாகும் சமயத்தில் கொடுக்க வேண்டிய தொகையை சிறிதளவு கொடுத்தாலும் கடன் நிவர்த்தியாகும்.

3.  மேற்கண்ட தினங்களில் ஷஷ்டி திதியும் குளிகன் சேரும் போது கடனை திருப்பி கொடுக்கலாம்

4.சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் ஆ லக்கினத்தில் உதயமாகும் காலத்தில் கடனை திருப்பி தரலாம்

5.    செவ்வாய் பிரதோஷ காலத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு 90நிமிடத்திற்குள் கடனை திருப்பி தரலாம்.

6.     லக்கினத்தில் ராகுவும் வியாதிபாதபோகம் கூடிய காலத்தில் கடனை திருப்பி தரலாம்

7.    சூரிய சந்திர கிரகணம் காலத்தில் கடனை திருப்பி தரலாம்

8.செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி தரலாம்



   ஜோதிடர் பிச்சைராஜா 9952400917

நண்பர்களே விரோதியாவார்கள்

 ***நண்பர்களே விரோதியாவர்கள்***


"விடம் ஏழ்இரண்டில் சேய்இருக்கின்

மிகுந்த நட்போர் விரோதியாரம்

நயமாய் தேளில் இரவிமதி

நண்ணின் மனையான் விரோதி என்பார்

பயமாய் ஓரேழ் இரண்டுடையோர்

பாவ வர்க்கம் அடைக்காமல்

செய்யார் குடும்பம் விரோதி என்பார்

சீராக கமலச் செழந்தேனே"


பொருள் விளக்கம்:


1.    2,7,12 ஸ்தானங்களில் ஒன்றில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு நண்பர்களே விரோதியாவார்கள்.

2.       சூரியனும் சந்திரனும் விருச்சிக ராசியில் அமர்ந்திருந்தால் அவருடைய மனைவியே அந்த ஜாதகருக்கு விரோதியாவார்கள்.

3.        லக்னாதிபதி ஏழுக்குடையவன் இரண்டுக்குடையவன் 1,2,7க்குடையவன் ஆகிய மூவரும் பாவர் வீட்டில் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு அவர் குடும்பமே அவருக்கு எதிரியாவார்கள்...


      ஜோதிடர் பிச்சைராஜா 9952400917